Sunday 28 May 2017

பொன் மானைத் தேடி..............

பொன் மானைத் தேடி..............  பொன்மானாய் தேடி வந்தோம் அதுபொய்மானாய் போய் விடுமோ !
பொற்குவியாய் நாடி வந்தோம் அதுவெற்குவியாய் ஆகிடுமோ !
பொற்கிளி தான் என எண்ணி , யதைபெற்று விட ஓடி வந்தோம் கையில்
கிடைப்பதற்குள் காணாமல் போய்விடுமோ
BSNL – லில் வேலை இதுபத்திர  மானதுதான் என எண்ணிபணிந்து பணிந்து தான்பணி செய்தோம்பத்திர மாய் நினைத்த தின்று வெற்றுப்பத்திர மாய் ஆகிடுமோ விடுமோ !
இது பொன்முட்டை யிடும் வாத்து,
என பார்த்துத்தான் பணியில் சேர்ந்தோம் அதைபொருக்காத நிர்வாகமும்  பொல்லாத அரசாங்கமும்பொசுக்கித்தான் போட்டிடுமோ ! ”பங்குபோட்டுமாற்றாருக்கு  விற்றுத்தான் தீர்த்திடுமோபத்தோடு பத்து சேர்ந்த ஆண்டுக்குமேல்பற்றோடு பகலிரவாய் பாடுபட்டு ,,கம்பம் நட்டு ,
கம்பி இழுத்து ,கடும் குழிகள் பல தோண்டி விட்டு ,
கேபிள்களின் பிணிதீர்த்து ,கணினியும் கற்றுத்தோய்ந்துவலைத்தளங்களும் வடிவமைக்கும் பேராற்றல் பெற்றுகாவல்பணியிலும் களமிரங்கி கால்பதித்து நடந்துவரும்எங்கள் கனவென்று மாறுமோ ! நினைவு என்று நீங்குமோநிரந்தரம் தான் எங்கள் கனா ! அது பகலிலேகண்ட  கனா வாய்  பலிக்காமல் போய்விடுமோஇப்படியெல்லாம் நித்தம் நித்தம் புலம்புகின்ராய்,
வறுமையோடு  நித்தம் யுத்தம் புரிகின்றாய்முடியப்போகுது உன் புலம்பல்,பலிக்கப் போகுதுஉன் கனவு,படியப்போகுது உன் நினைவுஓங்கி ஒலிப்போம் உலகமெல்லாம்தோல்வி இனி உனக்கில்லைதுடிப்பாய் இருந்திடு  தோழனே !
தேதி இனி ஏழுக்கு மேல் சம்பள பாக்கி இராதுபாக்கியாய் இருக்கும் அரியர்சும் பட்டெனவந்து சேருமே ,EPF பும் ESI யும்இனிமேல் முறையாய் ஆயிடுமே
பத்தாயிரம் சம்பளம் இது முத்தாகக் கிடைத்ததுபோல்அடுத்த இலக்கு அது பதிநெட்டாயிரம் .....
இதுதான் முடிவா என்றா லில்லை ……………இல்லை......
வேலைக்கு சமமாய் ஊதியம் பெற்றுத் தீருதல் ஒன்றேதீர்வாகும் , இதுதான் எமது முடிவாகும்இடப்பக்கம் செல்லும் என் இனிய தோழனே ! முன்னேறிசெல்லப்பாஉன்பாதையிலே, வெல்லப்பா உன் கொள்கைதனைஉன் பக்கம் நியாயம் இருக்க ,நாமும் உன்பக்கமிருக்கஏனிந்தசலசலப்பு எதர்கிந்த மனச் சலிப்புதோல்வி இனி உனக்கில்லை துவண்டிடாதே தோழனேசிட்டுக்குருவிகள் கூட சிக்காமல் போய்விடலாம்விட்டில் பூச்சிகளாய் வீழ்ந்துவிடமாட் டோம்நாம்ஏட்டில் எழுதியது இல்லாமல் போய்விடாதுகாட்டில் லுள்ள மரங்கள் கூட வயதானால் கழிந்துவிடும் ,
நாட்டில்லுள்ள நம் ஊழியர்களும் கணிசமாக கழிந்திடுவார் ,
அவர்பணி யில் ஓய்வுதனைப் பெற்றுவிட்டால்,
இத்தணை நாள் பொறுத்திட்டாய் இன்னும் மொருஆயிரம் நாள் எண்ணிப்பொறு  பலஆயிரம் பேருக்குமேல் நிரந்தரப் பணி கிடைத்திடுமே !
நிம்மதியும் வந்திடுமே ! வான்மதியும் நமை வாழ்த்திடுமே !
நீ தேடி வந்தது பொன்மான்தான்நீ நாடி வந்தது பொற்குவிதான்நீ வாங்கவந்தது  பொற்கிழிதான்எனும் காலம் வெகு தூரம் இல்லைசெங்கொடி என்றும் தாழ் ந்ததில்லைசெங்கொடி இயக்கம் என்றும் வீழ்ந்ததில்லைபோராடாமல் வெற்றி இல்லை,
போராட்டம் ஒன்றே வெற்றியின் எல்லை !!!
நாளை நமதே !! வெற்றி நமதே !!!
                       .எஸ்.சுந்தரக்கண்ணன்






ஒப்பந்த தொழிலாளர் திருப்பூர்



 நம்பிக் கை வைப்போம்..<<>>..நம்பி கை வைப்போம்
-------------------------------------


-------------------------------------

-------------------------------------
வல்லரசு தேசத்தில் கூடவாழ்வாதாரம் இழந்த நிலைஎம் நாட்டு மக்களுக்கோவிலைவாசி உயர்ந்த நிலைபரண் மேல் பருப்பு விலைஒரு ரூபாவாம் அரிசி விலைதனியார் மயம் தாராள மயம்இதுதான் இவர்களது தாரகமந்திரம்இலவசங்கள் பல உண்டென்பார்இவன் வசமுள்ள ஓட்டுக்காகபல குடும்பங்கள் வறுமையில் வாட
சில கும்பங்களே அரசியலில் ஆட
போராட்டம் நடத்தகூடபோதுமான உரிமையில்லைகுண்டர்களும் தொன்டர்களும்கும்பலாய் தாக்குகின்றனர்குண்டு களும் தோட்டாகளும்குறிபார்த்தே இருக்கின்றன
கொலையும் கொள்ளயும்கொள்கையாகி விட்டன
புகைப்பதும் குடிப்பதும்புனிதமாகிவிட்டன
நோய்களும் நொடிகளும்நோகமல் உள்ளனனிதனே னிதனை கொல்லும்மனிதாபிமானம் லிந்து விட்ட
இதயம் கூட இயந்திரத்தில்இயன்குகின்றனவாம்இப்படி நாட்டில் பிரச்சினைகளோஏராளம் இதில் எங்கள்பிரச்சினையும் தாராளம்கம்பம் நட்டோம்கம்பி இழுத்தோம்காளை போல்கை ண்டி இழுத்தோம்சுடும் வெயிலிலும் மண்டியிட்டோம்டும் குழிகள் பல தோண்டிவிட்டோம்சாக்கடையினுள் புகுந்து
ஜாயிண்டு ள் அடித்துவிட்டோம்ணினியை கூடச்சிதமாய்ண்ணியமாய் இயக்குகின்றோம்சின்னசின்னஎக்ஜேஞ்சு ளுக்குநாங்களே இயக்குனர்கள்ரின் வாரச்சம்பம் தான்எங்களின் மாதம்பம்போராட்டம் பல செய்தோம்பொருமையாய் இருந்திட்டோம்ங்கத்தின்மேல் ம்பிக்கைவைத்தோம் ம்பளத்தில்உயர்வு பெற்றோம்முருகையா,செல்லப்பாமீது ம்பிக்கை வைத்தோம்
அவர்களும் ம்பி _கைவைத்தார்கள்நல் அங்கிகாரம் பெற்று ந்தார்கள்அரியர்சும் வாங்கி ந்தார்கள்தோழ்கொடுக்கும் தோழமையைதொடர்ந்து வணங்குவோம்ணி நிரந்தம் என்பதும்நிகழ்காலத்திலேயே நிகழ்துவிடும்ம்பிக்கையோடு இருப்போம்நிம்மதியோடு இருப்போம்செங்கொடி என்றும்தாழ்ந்ததில்லைசெங்கொடி இயக்கம்என்றும் வீழ்ந்ததில்லை !
நாளை நமதே !வெற்றி நமதே!



எஸ் சுந்தக்கண்ணன்திருப்பூர் x

” மீண்டும் வேண்டும் விடுதலை “


பாரதி பாடித் துடித்த விடுதலை !
காந்தி மகான் காணத் துடித்த விடுதலை !
பகலுமன்றி இரவுமன்றி நள்ளிரவில்
விடியலாய் விடிந்தது ,விருப்பமாய் விளைந்தது.
விடுதலை தேசமாயினும் மீண்டும் ,
”வேண்டும் விடுதலை” என வேண்டித்தான்
நிற்கின்றோம் விருப்பித்தான் கேட்கின்றோம்.
வறுமையும், ஊழலும் நிரந்தரம் ஆகிவிட்டது
விலைவாசி உயரத்தில் , விசுவாசம் பள்ளத்தில்
உள்ளத்தின் கனவுகளில் லச்சமும் கோடியுமே !
கல்லறை நிலங்கள் கூட காணாமல் போகும் நிலை
சில்லறை போல் வாணிபமும் சிதறியே போன கதை
அண்டைநாட்டு தொழிலாளிகள் நம்நாட்டின் முதலாளிகள்
தண்ணீர் தண்ணீர், எனக் கண்ணீர் வடிக்கப் பல,
தேசங்கள் இருக்க,  பாட்டில் போட்டு விற்றுவரும்
பார்களையும் தாண்டி இன்று அரசே விற்கிறது.
பாஸ்மார்க் வாங்கவேண்டியவன் டாஸ்மாக் வாயிலில்...
பாதைகாட்டவேண்டிய அரசு போதைஏற்றும் வேலையில்...
பொதுத்துறை எல்லாம் தனித்துறை ஆக்கிவிட்டால்
துரை களுக்கு  இங்கே என்ன வேலை ?
சாதிக்க பிறந்தவனை சாதிக்குள் மாட்டிவிட்டு
மதமும், மொழி யுமாய் பிரித் தாளும்
சூழ்ச்சிக்கு , வீழ்ச்சியே ! என்றும் காட்சியாய் வேண்டும்  
தாத்தா கொடுத்ததை பேரன் கெடுப்பதும்,
மாமியார் தந்ததை மருமகள் எடுப்பதும் என,
மாறி மாறி தொடர்ந்த கதை முடிந்தது ,
ஆனால் இப்போது முடிந்த கதை  மீண்டும் தொடந்ததே!

என் சாதி, என் மதம் என சாக்கு போக்கு
சொல்லாமல் வாக்கு மாற்றி அளித்துவிட்டால்
உழைப்பவனுக்கு அரியணை கிடக்கும்,இதுவரை
சொன்ன சொல்லுக்கும் விடுதலை கிடைக்கும்,  
நம்மோடு சிறைபட்டு  நிற்கும் ஒப்பந்தத்திக்கும் ,
விடுதலை கிடத்து விடும்,  BSNL வீதியில் நாமெல்லம்
நிரந்தரமாய் வலம் வரலாம்  .
                               ஐ.எஸ். சுந்தரக்கண்ணன்

                           ஒப்பந்த தொழிலாளர்,திருப்பூர் .

விழிப்புணர்வு


எத்தனை கடவுள்கள் எததனை மதங்கள்
இத்தனை இருந்தும் இயம்புவ தென்ன?
இயன்ற வரை பிறருக்காய் இயல்பாய் உதவிடு
வாழும்வரை கூட வருவோர் மனம்
வலிக்காமல் வாழ்ந்திடு
வந்தது ஒரு முறை வாழ்வதும் ஒருமுறை
வாழ்ந்த வாழ்க்கையை வாழ்த்தவேண்டும்
தலைமுறை, நம் பெயரை ஊர் சொல்லவேண்டும்
பலமுறை, உலகமே போற்ற வேண்டும்
ஏழுதல முறை.1!!

சாதிமதமில்லா சனத்தை படைப்பதும்
ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டை உடைப்பதும்
சாலையை கடக்க விழி இலாருக்கு வழிகாட்டவும்
பாலையை பண்படுத்தி பாங்காய் பயிர் இடவும்
உழவுத்தொழிலால் ஊரும் தழைத்திட வும்
களவுத் தொலின்றி கண்னியமாய் வாழ்ந்திடவும்

நோய் நொடிகள் இல்லா சமூகம் படைக்க
மாசில்லா தரணியில் கொசு இல்லாதிருந்தாலே
மானிடனை கொண்ட நோய் மாண்டு விடும் 
மறுகணமே,பிள்ளையின் பட்டு போன்ற பாதமது
சொட்டு சொட்டாய் மருந்திட்டால்
இளம் பிள்ளை  வாத மெனும் ஊனமிலா து
மனிதசனம்  படைத்திடலாம் ,

அவன் திட்டமிட்டு
படித்திட்டால் பின் நாளில் சோற்றுகு பஞ்சமில்லா
பெருவாழ்வு வாழ்ந்திடலாம் வளமுடனே!
காலை முதல் மாலை வரை கண்ணியம் மாறாது
கருத்தாய் இருந்திட்டால் இரவென்ன பகலென்ன
சாலை என்ன சோலை என்ன விதி என்ன வீதி என்ன
வீழ்ந்திடாது  வாழ்ந்திடலாம்,வீரநடை போட்டிடலாம்

விண்ணுலகையும் வென்றிடலாம் வெறியுடனே!

Saturday 23 March 2013

அன்புள்ள அப்பாவுக்கு

அன்புள்ள அப்பாவுக்கு
தாயிற்சிறந்த கோயிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
தந்தை போலொரு மனிதர் தரணியிலில்லை
என் தந்தை உமை பற்றிய நினைவுகள்
நீங்கவில்லை கனவுகளும் ஓயவில்லை
அந்த நாள் நினைவுகளும் எங்களோடு
வாழ்ந்த அந்தநாள் ஞாபங்கங்களும் !
நிழலாடு கின்றதையா ! நெஞ்சத்தில்
கனவாகிப் போனதய்யா!
நின் தாயின் ஊரிலேதான்
என் தாயைக் கண்டெடுத்தீர்,
என் தாயின் ஊரினிலே
வாழ்க்கையை தொடங்கிட்டீர்
ராஜம்மா எந்தாயை தாரமாகிக்யபோதே
ராஜாவா ஆனீங்க ராசனாகவே வாழ்ந்தீங்க
இவர் போல துணிதைக்க யாருஇகுக்கா
ஊருக்குள்ள ! என்ற பேரு பெற்றீங்க ,
நல்ல பேரும் பெற்றீங்க நாகரீகமா வளந்தீங்க
ஏற்றமானா வாழ்க்கையில
எங்கநாலு பேரை பெற்றீங்க
என் அன்னை, தன் தமக்கையின்
மகனையும் தன்மகன் போல்
வளர்த்துவர நால்வரோடு ஐவரானோம்
நாங்க ஒண்ணா வளர்ந்து வந்தோம்
1975 களில் எடச்சுளார் கடை என்றால்
ஏகப்பட்ட மவுசு அந்தக்காலத்தில்
மளிகை கடை நடத்தும் போதே
மக்கள் சொன்ன  யோசனை கேட்டு
புகையிலை வியாபாரத்தை
புதுசா தொடங்கினீங்க
ஊரில் பலபேர், வேலைக்கும் வந்தாங்க
விருப்பமா வேலையுஞ் செஞ்சாங்க
கோவையிலே வெட்டிய புகைஇலை
கொத்துக்கொத்தாய் கொண்டுவந்து
வண்டியில் இருந்து இறக்கி போட
வந்தவங்க  எத்தனை பேர்?
ரெண்டு மூணு இலைகளை
தலைகீழா பிடித்துத் தூக்கி
பனை இளங்கீற்றினிலே பக்குவமாய்
முடிச்சி போட முன்வந்தவங்க
எத்தனை பேர்?
சுள்ளயில உள்ளபோய் பட்டியலில்
கட்டியவங்க பட்டியலில் எத்தனை பேர்
பச்சயாய் இருந்த இலை கருப்பாய் ஆனபின்னே
முடிந்த முடிச்சி களை அவிழ்க்க
முன் வந்தவங்க எத்தனைபேர்
அவிழ்ந்த இலைகளை பின்
நெட்டை தலையாய் வைத்து
முடிமுடியாய் கட்டவந்தமுதியவர்கள்
எத்தனைபேர்
முடித்த முடிச்சுகளை  மூழ்கிஎடுக்க
கடல் நீரைக் கொண்டுவர
காளை பூட்டிய களையர்கள்
எத்தனைபேர்
தலை முடிபோல் பொதிந்த புகையிலையை
கத்தையாய் கட்டிவிட இளங்கன்னியர்கள்
எத்தனை பேர்
சிப்பங்களாய் கட்டிவிட்ட
சிப் பாய்கள் எத்தனை பேர்
டெய்லராய் இருந்தபோது காஜா போட
வந்த காளையர்கள்  எத்தனைபேர்
எத்தனை பேர் வந்தாலும் அத்தனை
பேருக்கும் வேலை கொடுத்தீர்
மாமனாரும் துணைக்கு இல்லை
மைத்துணரும் துணையில் இல்லை
உம் உழைப்பால் நீர் உயர்ந்தீர்……..
ஊருக்கே உத்தமர் ஆனீர்……
யார் கண்பட்டதோ ,ஊர்கண்தான் பட்டதோ
புகையிலை புகை-இலை ஆனாது
பூக்காத புகையிலை பூத்துப்போனது
நாட்டமாக  செய்ததொழில்
நட்டம் வந்ததென நாலுவயலையும்
வந்த விலைக்கு வித்தீங்களெ
நமக்கு பணம் தரவேண்டியவர்கள்
பணம் தந்தாலே இன்னும்
நாலு வயல்வாங்கலாமே
நம் கடை பாக்கி கொண்டவர்களிடம்
வசூல் செய்திருந்தால்
பலமகசூல் பெருகியிருக்குமே!
சொத்துக்காக சொந்தங்கள் பகைத்தன
சொந்தமே சூனியமும் வைத்தன
நீர் நட்பையும் சொந்தத்தையும்
பெரியதாககருதியது  சமீபத்தில் தான்
எனக்குப்புரிந்தது,
1970 களில் எழுதப்பட்ட பழைய கடிதங்கள் கிடைத்தன
மாமனாரும் மைத்துணரும் எழுதிய கடிதம் அது ,
ஒன்றில் பாசமிருந்தது மற்றொன்றில் வேசம் இருந்தது
ஒன்றில் விசயம் இருந்தது
இன்னொன்றில் விசமம் இருந்தது
அதே ஆண்டுகளில் உங்கள் நண்பர் எழுதிய
கடிதமும் பலகிடத்தது
சாமிக்கு நிகராகவே உங்களை வர்ணித்திருந்தார்
அவர் படித்த படிப்பு கூட உங்கள் செலவாம்
அவரே எழுதியிருந்தார்….
இப்படி எல்லோருக்கும் நல்லவராய்
இருந்து கொண்டு எல்லோரிடமும்
அன்பை பொழிந்துவிட்டு நாங்கள் உங்கள்
அன்பை சுமந்து அல்லல் படும்படியாய்
ஆக்கிட்டுச்சென்றீரோ!! அவமாய் சென்றீரோ!
நாளெல்லாம் உழைத்ததால் களைத்தீரோ
உரங்காமல் சென்றீரோ
எங்கே இருக்கின்றீர் எப்படி இருக்கின்றீர்
எங்கெல்லாம் தேடுகின்றோம்
என்றென்றும் உம் நினைவால் வாடுகின்றோம்
நீர் இறந்தசெய்தி கேட்டு ஊரே
திரண்டு வந்து ஒப்பாறிவைதனரே!
ஓயவில்லை அந்நினைவு
ஐந்தாறு மாதங்களில் அவிந்து விடும் அவர்
நினவு என பதினாறுக்கு வந்தாரும்
சொன்னார்கள் வாயார அழுதார்கள் !
ஆண்டுகள் ஆயினும்
உம் நினைவுகள் அழியவில்லை
எம் நெஞ்சமும் மற‌‌க்கவில்லை!
ருகள் பல செய்த போதும் எனை
ன்னித்தீர்கள், தன்மானம் ஒன்றையே
மதிக்கவேண்டுமென கர்பித்தீர்கள்
தந்தை சொல் கேட்ட தணையன்
தரங் கெட்டும்  போனதில்லை,
ந்தை ழி ந்தோன் என்னும்
ங்கெட்டும்  போனதில்லை !
நீர் இல்லாத இவ் வாழ்க்கை
நீரில்லா மீன் போலானது!
நீரில்லா நீறோடையில்
நீந்துவதற்கு "நீர்" இல்லையே!